தனிப்பர நாத வெளியின்மேல் நினது தன்மயந் தன்மயம் ஆக்கிப் பனிப்பிலா தென்றும் உள்ளதாய் விளங்கிப் பரம்பரத் துட்புற மாகி இனிப்புற ஒன்றும் இயம்புறா இயல்பாய் இருந்ததே அருளனு பவம்என் றெனக்கருள் புரிந்தாய் ஞானசம் பந்தன் என்னும்என் சற்குரு மணியே