தனிப்பெருந் தலைவரே தாயவ ரேஎன் தந்தைய ரேபெருந் தயவுடை யவரே பனிப்பறுத் தெனையாண்ட பரம்பர ரேஎம் பார்வதி புரஞானப் பதிசிதம் பரரே இனிச்சிறு பொழுதேனுந் தாழ்த்திடல் வேண்டா இறையவ ரேஉமை இங்குகண் டல்லால் அனிச்சய உலகினைப் பார்க்கவும் மாட்டேன் அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே