தனிப்பெரும் பதியே என்பதி ஆகத் தவம்எது புரிந்ததோ என்றாள் அனித்தநீத் தெனைத்தான் அன்பினால் அணைத்தான் அதிசயம் அதிசயம் என்றாள் இனித்துயர் சிறிதும் அடைந்திடேன் என்றாள் எனக்கிணை யார்கொலோ என்றாள் சனிப்பிறப் பறுத்தேன் என்றுளே களிப்புத் ததும்பினாள் நான்பெற்ற தனியே