தனியேஇங் குழல்கின்ற பாவியேன் திருத்தணிகா சலம்வாழ் ஞானக் கனியேநின் வேடியைக் கண்ஆரக் கண்டுமனம் களிப்பு றேனோ துனியேசெய் வாழ்வில்அலைந் தென்எண்ணம் முடியாது சுழல்வேன் ஆகில் இனிஏது செய்வேன்மற் றொருதுணையும் காணேன்இவ் வேழை யேனே