தனையர்செய் பிழையைத் தந்தையர் குறித்துத் தள்ளுதல் வழக்கல என்பார் வினையனேன் பிழையை வினையிலி நீதான் விவகரித் தெண்ணுதல் அழகோ உனையலா திறந்தும் பிறந்தும்இவ் வுலகில் உழன்றிடுந் தேவரை மதியேன் எனையலா துனக்கிங் காளிலை யோஉண் டென்னினும் ஏன்றுகொண் டருளே