தனையா வென்றழைத் தே - அருட் - சத்தி யளித்தவ னே அனையா யப்பனு மாய் - எனக் - காரிய னானவ னே இனையா தென்னையு மேல் - நிலை - ஏற்றுவித் தாண்டவ னே உனையான் ஏத்துகின் றேன் - எனக் - குண்மை உரைத்தரு ளே