தனையாள் பவரின்றி நிற்கும் பரமன் தனிஅருளாய் வினையாள் உயிர்மல நீக்கிமெய் வீட்டின் விடுத்திடுநீ எனையாள் அருளொற்றி யூர்வா ழவன்றன் னிடத்துமொரு மனையாள் எனநின்ற தென்னே வடிவுடை மாணிக்கமே