தன்னந் தனியா யிங்குநிற்குஞ் சாமி யிவரூ ரொற்றியதா மன்னந் தருவீ ரென்றார்நா னழைத்தே னின்னை யன்னமிட முன்னம் பசிபோ யிற்றென்றார் முன்னின் றகன்றே னிவ்வன்ன மின்னந் தருவா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ