தன்னால் உலகை நடத்தும்அருட் சாமி தணிகை சாராமல் பொன்னால் மண்ணால் பூவையரால் புலம்பி வருந்தும் புல்நெஞ்சே உன்னால் என்றன் உயர்விழந்தேன் உற்றார் இழந்தேன் உன்செயலைச் சொன்னால் நகைப்பர் எனைவிட்டும் தொலையாய் இங்கு நிலையாயே