தன்னே ரில்லவ னே - எனைத் - தந்த தயாநிதி யே மன்னே மன்றிடத் தே - நடஞ் - செய்யுமென் வாழ்முத லே பொன்னே என்னுயி ரே - உயி - ருள்நிறை பூரண மே அன்னே தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே
தன்னே ரிலாத தலைவாசிற் றம்பலம் தன்னில்என்னை இன்னே அடைகுவித் தின்பருள் வாய்இது வேதருணம் அன்னே எனைப்பெற்ற அப்பாஎன் றுன்னை அடிக்கடிக்கே சொன்னேன்முன் சொல்லுகின் றேன்பிற ஏதுந் துணிந்திலனே