தன்னைவிடத் தலைமைஒரு தகவினும்இங் கியலாத் தனித்தலைமைப் பெரும்பதியே தருணதயா நிதியே பொன்னடிஎன் சிரத்திருக்கப் புரிந்தபரம் பொருளே புத்தமுதம் எனக்களித்த புண்ணியனே நீதான் என்னைவிட மாட்டாய்நான் உன்னைவிட மாட்டேன் இருவரும்ஒன் றாகிஇங்கே இருக்கின்றோம் இதுதான் நின்னருளே அறிந்ததெனில் செயுஞ்செய்கை அனைத்தும் நின்செயலோ என்செயலோ நிகழ்த்திடுக நீயே