தன்பெருமை தான்அறியாத் தன்மையனே எனது தனித்தலைவா என்னுயிர்க்குள் இனித்ததனிச் சுவையே நின்பெருமை நான்அறியேன் நான்மட்டோ அறியேன் நெடுமால்நான் முகன்முதலா மூர்த்திகளும் அறியார் அன்புறும்ஆ கமமறைகள் அறியாவே எனினும் அவரும்அவை களும்சிலசொல் அணிகின்றார் நினக்கே என்பருவம் குறியாதே எனையாண்ட அரசே யானும்அவர் போல்அணிகின் றேன்அணிந்திங் கருளே