தன்மைபிறர்க் கறிவரியீர் ஆடவா ரீர் தனித்தலைமைப் பெரும்பதியீர் ஆடவா ரீர் வன்மைமனத் தவர்க்கரியீர் ஆடவா ரீர் வஞ்சமிலா நெஞ்சகத்தீர் ஆடவா ரீர் தொன்மைமறை முடியமர்ந்தீர் ஆடவா ரீர் துரியபதங் கடந்தவரே ஆடவா ரீர் இன்மைதவிர்த் தெனைமணந்தீர் ஆடவா ரீர் என்னுடைய நாயகரே ஆடவா ரீர் ஆடவா ரீர்