தன்வடிவம் தானாகும் திருச்சிற்றம் பலத்தே தனிநடஞ்செய் பெருந்தலைவர் பொற்சபைஎங் கணவர் பொன்வடிவம் இருந்தவண்ணம் நினைத்திடும்போ தெல்லாம் புகலரும்பே ரானந்த போகவெள்ளம் ததும்பி என்வடிவில் பொங்குகின்ற தம்மாஎன் உள்ளம் இருந்தபடி என்புகல்வேன் என்அளவன் றதுதான் முன்வடிவம் கரைந்தினிய சர்க்கரையும் தேனும் முக்கனியும் கூட்டிஉண்ட பக்கமும்சா லாதே