தப்படி எடுத்துக்கொண் டுலகவர் போலே சாற்றிட மாட்டேன்நான் சத்தியம் சொன்னேன் செப்படி வித்தைசெய் சித்தர்என் றோதும் தேவரீர் வல்லபத் திருச்சமு கத்தே இப்படி வான்முதல் எங்கணும் அறிய என்னுடல் ஆதியை ஈந்தனன் உமக்கே எப்படி ஆயினும் செய்துகொள் கிற்பீர் எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே