தமைஅறியார் எல்லாரும் புறத்திருக்க நான்போய்ச் சபைநடங்கண் டுளங்களிக்கும் தருணத்தே தலைவர் இமைஅறியா விழிஉடையார் எல்லாரும் காண இளநகைமங் களமுகத்தே தளதளஎன் றொளிர எமைஅறிந்தாய் என்றெனது கைபிடித்தார் நானும் என்னைமறந் தென்இறைவர் கால்பிடித்துக் கொண்டேன் சுமைஅறியாப் பேரறிவே வடிவாகி அழியாச் சுகம்பெற்று வாழ்கஎன்றார் கண்டாய்என் தோழி