தயைஉடையார் எல்லாரும் சமரசசன் மார்க்கம் சார்ந்தவரே ஈங்கவர்கள் தம்மோடுங் கூடி நயமுறுநல் அருள்நெறியில் களித்துவிளை யாடி நண்ணுகஎன் றெனக்கிசைத்த நண்புறுசற் குருவே உயலுறும்என் உயிர்க்கினிய உறவேஎன் அறிவில் ஓங்கியபேர் அன்பேஎன் அன்பிலுறும் ஒளியே மயலறுமெய்த் தவர்சூழ்ந்து போற்றும்மணி மன்றில் மாநடத்தென் அரசேஎன் மாலைஅணிந் தருளே