தரித்திடேன் சிறிதும் தரித்திடேன் எனது தளர்ச்சியும் துன்பமும் தவிர்த்தே தெரித்திடல் அனைத்தும் தெரித்திடல் வேண்டும் தெரித்திடாய் எனில்இடர் எனைத்தான் எரித்திடும் அந்தோ என்செய்வேன் எங்கே எய்துகேன் யார்துணை என்பேன் திரித்தநெஞ் சகத்தேன் சரித்திரம் அனைத்தும் திருவுளம் தெரிந்தது தானே