தரைத்தலத் தெனைநீ எழுமையும் பிரியாத் தம்பிரான் அல்லையோ மனத்தைக் கரைத்துளே புகுந்தென் உயிரினுட் கலந்த கடவுள்நீ அல்லையோ எனைத்தான் இரைத்திவ ணளித்தோர் சிற்சபை விளங்கும் எந்தைநீ அல்லையோ நின்பால் உரைத்தல்என் ஒழுக்கம் ஆதலால் உரைத்தேன் நீஅறி யாததொன் றுண்டோ