தரையிற் கீறிச் சலந்தரனைச் சாய்த்தார் அந்தச் சக்கரமால் வரையற் களித்தார் திருஒற்றி வாணர் இன்னும் வந்திலரே கரையிற் புணர்ந்த நாரைகளைக் கண்டேன் கண்ட வுடன்காதல் திரையிற் புணர்ந்தேன் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே