தற்பர யோக மருந்து - உப சாந்த ருளத்திடைச் சார்ந்த மருந்து சிற்பர யோக மருந்து - உயர் தேவரெல் லாந்தொழுந் தெய்வ மருந்து நல்ல
தற்பர மேவடி வாகி - அது தன்னைக் கடந்து தனிஉரு வாகிச் சிற்பரத் துள்ளது பாரீர் - திருச் சிற்றம் பலத்தே திருநட ஸோதி ஸோதி