தற்பரம் பொருளே வேதத் தலைநின்ற ஒளியே மோனச் சிற்பர சுகமே மன்றில் திருநடம் புரியுந் தேவே வற்புறு மாயை எல்லாம் மடிந்தன வினைக ளோடே இற்படும் இருளை நீக்கி இரவியும் எழுந்த தன்றே சிதம்பரேசன் அருள் கலி விருத்தம்