தற்போதந் தோன்றாத தலந்தனிலே தோன்றும் தாள்மலர்கள் வருந்தியிடத் தனித்துநடந் தருளி எற்போதங் ககன்றிரவில் யானிருக்கு மிடம்போந் தெழிற்கதவந் திறப்பித்திவ் வெளியேனை அழைத்துப் பொற்போத வண்ணம்ஒன்றென் கைதனிலே அளித்துப் புலையொழிந்த நிலைதனிலே பொருந்துகஎன் றுரைத்தாய் சிற்போத மயமான திருமணிமன் றிடத்தே சிவமயமாம் அனுபோகத் திருநடஞ்செய் அரசே