தலங்கன் தோறும்சென் றவ்விடை அமர்ந்த தம்பி ரான்திருத் தாளினை வணங்கி வலங்கொ ளும்படி என்னையும் கூட வாஎன் கின்றனை வாழிஎன் நெஞ்சே இலங்கள் தோறும்சென் றிரந்திடும் அவனே என்னை உன்னையும் ஈர்க்குவன் அதற்கு நலங்கொ ளும்துணை யாதெனில் கேட்டி நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே