தலத்த னேதில்லைச் சங்கர னேதலைக் கலத்த னேநெற்றிக் கண்ணுடை யாளனே நலத்த னேஒற்றி நாயக னேஇந்த மலத்த னேனையும் வாழ்வித்தல் மாண்பதே