தலம்வளர் திருச்சிற் றம்பலத் தோங்கும் தனித்தமெய்ப் பொருட்பெருஞ் சிவமே நலம்வளர் கருணை நாட்டம்வைத் தெனையே நண்புகொண் டருளிய நண்பே வலமுறு நிலைகள் யாவையுங் கடந்து வயங்கிய தனிநிலை வாழ்வே பலமுறும் உளத்தே இனித்திட எனக்கே பழுத்தபே ரானந்தப் பழமே -------------------------------------------------------------------------------- திருவடி நிலை எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்