தலைநெறி ஞான சுத்தசன் மார்க்கம் சார்ந்திட முயலுறா தந்தோ கலைநெறி உலகக் கதியிலே கருத்தைக் கனிவுற வைத்தனர் ஆகிப் புலைநெறி விரும்பி னார்உல குயிர்கள் பொதுஎனக் கண்டிரங் காது கொலைநெறி நின்றார் தமக்குளம் பயந்தேன் எந்தைநான் கூறுவ தென்னே