தலைவர்கள் எல்லாம் தனித்தனி வணங்கும் தலைவனே இன்றும்என் உளமும் மலைவில்என் அறிவும் நானும்இவ் வுலக வழக்கிலே உயிர்இரக் கத்தால் இலகுகின் றனம்நான் என்செய்வேன் இரக்கம் என்னுயிர் என்னவே றிலையே நிலைபெறும் இரக்கம் நீங்கில்என் உயிரும் நீங்கும்நின் திருவுளம் அறியும்