தளர்ந்திடேல் மகனே என்றெனை எடுத்தோர் தாய்கையில் கொடுத்தனை அவளோ வளர்ந்திடா வகையே நினைத்தனள் போன்று மாயமே புரிந்திருக் கின்றாள் கிளர்ந்திட எனைத்தான் பெற்றநற் றாயும் கேட்பதற் கடைந்திலன் அந்தோ உளந்தரு கருணைத் தந்தையே நீயும் உற்றிலை பெற்றவர்க் கழகோ