தளிநான் மறையீ ரொற்றிநகர் தழைத்து வாழ்வீர் தனிஞான வொளிநா வரைசை யைந்தெழுத்தா லுவரி கடத்தி னீரென்றேன் களிநா வலனை யீரெழுத்தாற் கடலில் வீழ்த்தி னேமென்றார் அளிநாண் குழலா யென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே
தளிநான் மறையீ ரொற்றிநகர் தழைக்க வாழ்வீர் தனிஞான வொளிநா வரசை யைந்தெழுத்தா லுவரி கடத்தி னீரென்றேன் களிநா வலனை யீரெழுத்தாற் கடலின் வீழ்த்தி னேமென்றே யெளியேற் குவப்பின் மொழிகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ