தளைக்கின்ற மாயக் குடும்பப் பெருந்துயர் தாங்கிஅந்தோ இளைக்கின்ற ஏழைக் கிரங்குகண் டாய்சிறி தேஇறகு முளைக்கின்ற போதறுப் பார்போல்நின் னாம மொழிந்திடுங்கால் வளைக்கின்ற மாயைக்கிங் காற்றேன்முக் கண்ணுடை மாமணியே