தவநேய மாகும்நின் தாள்நேய மின்றித் தடமுலையார் அவநேய மேற்கொண் டலைகின்ற பேதைக் கருள்புரிவாய் நவநேய மாகி மனவாக் கிறந்த நடுஒளியாம் சிவனே வயித்திய நாதா அமரர் சிகாமணியே
தவநேய மும்சுத்த சன்மார்க்க நேயமும் சத்தியமாம் சிவநேய மும்தந்தென் உள்ளம் தெளியத் தெளித்தனையே நவநேய மன்றில் அருட்பெருஞ் சோதியை நாடிநின்ற இவனே அவன்எனக் கொள்வார்உன் அன்பர் இருநிலத்தே