தவம தின்றிவன் மங்கையர் முயக்கால் தருமம் இன்றுவஞ் சகர்கடுஞ் சார்வால் இவகை யால்மிக வருந்துறில் என்னாம் எழில்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து பவம தோட்டிநல் ஆனந்த உருவாம் பாங்கு காட்டிநல் பதந்தரும் அடியார் உவகை ஓம்சிவ சண்முக சிவஓம் ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே