தவம்உண்மையொ டுறும்வஞ்சகர் தம்சார்வது தவிரும் நவம்அண்மிய அடியாரிடம் நல்கும்திறன் மல்கும் பவனன்புனல் கனல்மண்வெளி பலவாகிய பொருளாம் சிவசண்முக எனவேஅருள் திருநீறனிந் திடிலே