தவம்பெறு முனிவருள்ளத் தாமரை அமர்ந்தோய் போற்றி பவம்பெறுஞ் சிறியேன் தன்னைப் பாதுகாத் தளித்தோய் போற்றி நவம்பெறு நிலைக்கும் மேலாம் நண்ணிய நலமே போற்றி சிவம்பெறும் பயனே போற்றி செங்கதிர் வேலோய் போற்றி