தவம்வளர் தயையே தயைவளர் தவமே தவநிறை தயைவளர் சதுரே நவம்வளர் புரமே புரம்வளர் நவமே நவபுரம் வளர்தரும் இறையே துவம்வளர் குணமே குணம்வளர் துவமே துவகுணம் வளர்தரு திகழ்வே சிவம்வளர் பதமே பதம்வளர் சிவமே சிவபதம் வளர்சிவ பதியே