தவள நீற்றுமெய்ச் சாந்தவி னோதரே பவள மேனிப் படம்பக்க நாதரே கவள வீற்றுக் கரிஉரி போர்த்தநீர் இவளை ஒற்றிவிட் டெங்ஙனம் சென்றிரோ
தவள நிறத்துத் திருநீறு தாங்கு மணித்தோள் தாணுவைநம் குவளை விழித்தாய் ஒருபுறத்தே குலவ விளங்கும் குருமணியைக் கவள மதமா கரியுரிவைக் களித்த மேனிக் கற்பகத்தைப் பவள மலையைப் பழமலையிற் பரவி ஏத்திக் கண்டேனே