தாங்கஎன் தனைஓர் தாய்கையில் கொடுத்தாய் தாயவள் நான்தனித் துணர்ந்து தூங்கவும் ஒட்டாள் எடுக்கவும் துணியாள் சூதையே நினைத்திருக் கின்றாள் ஓங்குநற் றாயும் வந்திலாள் அந்தோ உளந்தளர் வுற்றனன் நீயும் ஈங்குவந் திலையேல் என்செய்கேன் இதுதான் எந்தைநின் திருவருட் கழகோ