தாணு ஈன்றருள் செல்வமே தணிகையில் சாமியே நினைஏத்திக் காணு வேன்இலை அருள்இவண் புன்மையில் காலங்கள் கழிக்கின்றேன் மாணும் அன்பர்கள் என்சொலார் ஐயநீ வந்தெனக் கருள்வாயேல் நாணு வேன்அலன் நடுங்கலன் ஒடுங்கலன் நாயினும் கடையேனே