தாதா உணவுடை தாதா எனப்புல்லர் தம்மிடைப்போய் மாதாகம் உற்றவர் வன்நெஞ்சில் நின்அடி வைகுங்கொலோ காதார் நெடுங்கட் கரும்பேநல் ஒற்றிக் கருத்தர்நட வாதா ரிடம்வளர் மாதே வடிவுடை மாணிக்கமே