தானந்தம் இல்லாத தன்மையைக் காட்டும் சாகாத கல்வியைத் தந்தெனக் குள்ளே தேனந்தத் தெள்ளமு தூற்றிப் பெருக்கித் தித்தித்துச் சித்தம் சிவமய மாக்கி வானந்தம் ஆதியும் கண்டுகொண் டழியா வாழ்க்கையில் இன்புற்றுச் சுத்தவே தாந்த ஆனந்த வீதியில் ஆடச்செய் தீரே அருட்பெருஞ் ஸோதிஎன் ஆண்டவர் நீரே