தானாகித் தானல்ல தொன்று மில்லாத் தன்மையனாய் எவ்வெவைக்குந் தலைவ னாகி வானாகி வளியனலாய் நீரு மாகி மலர் தலைய உலகாகி மற்று மாகித் தேனாகித் தேனினறுஞ் சுவைய தாகித் தீஞ்சுவையின் பயனாகித் தேடு கின்ற நானாகி என்னிறையாய் நின்றோய் நின்னை நாயடியேன் எவ்வாறு நவிற்று மாறே