தானேதான் ஆகிஎலாம் தானாகி அலனாய்த் தனிப்பதியாய் விளங்கிடும்என் தந்தையைஎன் தாயை வானேஅவ் வான்கருவே வான்கருவின் முதலே வள்ளால்என் றன்பரெலாம் உள்ளாநின் றவனைத் தேனேசெம் பாகேஎன் றினித்திடுந்தெள் ளமுதைச் சிற்சபையில் பெருவாழ்வைச் சிந்தைசெய்மின் உலகீர் ஊனேயும் உடலழியா தூழிதொறும் ஓங்கும் உத்தமசித் தியைப்பெறுவீர் சத்தியம்சொன் னேனே