தான்எனைப் புணரும் தருணம்ஈ தெனவே சத்தியம் உணர்ந்தனன் தனித்தே தேன்உறக் கருதி இருக்கின்றேன் இதுநின் திருவுளம் தெரிந்ததெந் தாயே ஆன்எனக் கூவி அணைந்திடல் வேண்டும் அரைக்கணம் ஆயினும் தாழ்க்கில் நான்இருப் பறியேன் திருச்சிற்றம் பலத்தே நடம்புரி ஞானநா டகனே