தாமப் புயனார் சங்கரனார் தாயில் இனியார் தற்பரனார் ஓமப் புகைவான் உறும்ஒற்றி யூர்வாழ் உடையார் உற்றிலரே காமப் பயலோ கணைஎடுத்தான் கண்ட மகளீர் பழிதொடுத்தார் சேமக் குயிலே என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே