தாயானைத் தந்தைஎனக் காயி னானைச் சற்குருவு மானானைத் தமியேன் உள்ளே மேயானைக் கண்காண விளங்கி னானை மெய்ம்மைஎனக் களித்தானை வேதஞ் சொன்ன வாயானை வஞ்சம்இலா மனத்தி னானை வரங்கொடுக்க வல்லானை மணிமன் றன்றி ஏயானைத் துரியநடு விருக்கின் றானை எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே