தாயினும்பே ரருளுடையார் என்னுயிரில் கலந்த தனித்தலைவர் நான்செய்பெருந் தவத்தாலே கிடைத்தார் வாயினும்ஓர் மனத்தினும்மா மதியினும்எத் திறத்தும் மதித்தளத்தற் கருந்துரிய மன்றில்நடம் புரிவார் ஆயினும்என் அளவின்மிக எளியர்என என்னை அகம்புணர்ந்தார் புறம்புணர்ந்தார் புறப்புணர்ச்சித் தருணம் தூயஒளி பெற்றழியா தோங்குவடி வானேன் சுகமயமாம் அகப்புணர்ச்சி சொல்லுவதெப் படியோ