தாயிற் பெரிய கருணையினார் தலைமா லையினார் தாழ்சடையார் வாயிற் கினிய புகழுடைய வள்ளல் அவர்தந் திருஅழகைக் கோயிற் கருகே சென்றுமனம் குளிரக் கண்டேன் பிரிவுற்றேன் ஈயில் சிறியேன் அவர்அழகை இன்னும் ஒருகால் காண்பேனோ