தாய்கொண்ட திருப்பொதுவில் எங்கள்குரு நாதன் சந்நிதிபோய் வரவிடுத்த தனிக்கரணப் பூவை காய்கொண்டு வந்திடுமோ பழங்கொண்டு வருமோ கனிந்தபழங் கொண்டுவருங் காலதனை மதமாம் பேய்கொண்டு போய்விடுமோ பிலத்திடைவீழ்ந் திடுமோ பின்படுமோ முன்படுமோ பிணங்கிஒளித் திடுமோ வாய்கொண்டு வென்றிடுமோ தோற்றிடுமோ என்னை மறந்திடுமோ திருஉளத்தின் வண்ணம்அறிந் திலனே