தாய்க்கும் தந்தைக்கும் நிகரும்நின் இருதாள் சார்ந்த மேலவர் தமைத்தொழு தேத்தா நாய்க்கும் நாய்எனும் பாவியேன் பிழையை நாடி நல்லருள் நல்கிடா திருந்தால் ஏய்க்கும் மால்நிறக் காலன்வந் திடும்போ தென்கொ லாம்இந்த எண்ணம்என் மனத்தைத் தீய்க்கு தென்செய்வேன் ஒற்றியம் சிவனே தில்லை அம்பலம் திகழ்ஒளி விளக்கே